ஹோலிவூட்டுக்கு அப்பெயரை சூட்டியவர்

1.அமெரிக்காவின் கலிபோர்னியா ஹோலிவூட்டுக்கு அப்பெயரை சூட்டியவர் திருமதி ஹாரல் வில்காக்ஸ் என்பவர். 1880-ல் அங்கு குடியேறிய மக்கள் அப்பகுதிக்கு ஏதேனும் பெயரிட விரும்பினர். அப்போது இந்த பகுதிக்கு வரும் வழியில் ஸ்பெயின் தேச பாதிரியார்கள் பெரிய மரத்தாலான சிலுவையை அமைத்து இருந்தார்கள். இதை அங்கு இருந்த இந்தியர்கள் புனிதமான மரம் என்று குறிப்பிடும் வகையில் "ஹோலி வூட்" என்று குறிப்பிட்டனர். அதுவே வில்காக்ஸ் அவர்களால் Hollywood என்றானது.

2.எந்த விசயத்திலாவது அதிக பற்று கொண்டிருப்பவர்களை fanatic என்பார்கள். இது நாளடைவில் fan என்று சுருங்கி விட்டது. சினிமா ரசிகர்கள் நடிகர்கள் மீது கொண்ட அதீத விருப்பத்தால் fan என்பது நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டு விசிறி என்றும் ஆனது.

3.1926-ல் ஹோலிவூடின் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டவர் ரின்-டின்-டின் (இவர் ஒரு நாய்)

4.நியூயார்க்கில் உள்ள ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் என்ற தியட்டரே உலகின் மிகப்பெரிய தியேட்டர். 6400 பேர் உட்கார்ந்து சினிமா பார்க்காலாம்.

5.முதன்முதலில் தபால் தலையில் இடம்பெற்ற சினிமா பிரபலம் நடிகை "கிரேஸ் கெல்லி" அவர் நடிகை என்பதால் மட்டுமல்ல, அவர் மோனக்கொவின் இளவரசி என்பதாலும்.

6.ஹாலிவுட் நடிகர் "லென்லி வாலர்" என்பவருக்கு தான் 1902-ல் முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டது. அவர் தனது ரசிகர்களிடம் எப்போதும் தம்மை அனாவசியமாக சந்திக்க கூடாது, தமக்காக ஏதும் செய்யவும் கூடாது என்று உறுதி பெற்ற பின்னரே மன்றத்திற்கு அனுமதி அளித்தாராம்.
Related Labels:

No comments for: "ஹோலிவூட்டுக்கு அப்பெயரை சூட்டியவர்"


Leave a Reply

Powered by Blogger.

Blog Archive

More Latest