அவசர இலக்கமான 119 உடன் தொடர்பினை ஏற்படுத்திய பின்னர் பொலிசார் தாக்கப்பட்டார்.

119 அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்ப டுத்தி, பொலிஸார் விரைந்ததும், பொலிஸார் மீது தாக் குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று பள்ளக்கட்டுவ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தொரியவருவதாவது.

பள்ளக்கட்டுவையில் இரு பெண்கள் மோதல்களில் ஈடுபட் டுக் கொண்டிருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவி 119 க்கு தொடர்புகொண்டு பொலிஸாரை வரவழைத்து, அவர்கள் மீது தாக்குதல் மேற் கொள்ளப்பட்டது. இத்தாக்குதல்களில் தாக்குதல்களுக்குள்ளாகி, இரு பொலிஸார் தெமோதரை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பள்ளக்கட்டுவையில் எத்தகைய மோதலும் இடம் பெறவில்லையென்றும், பொலிஸாரை தாக்குவதற்கே அவசர பிரிவு இலக் கத்திற்கு அறிவிக்கப்பட்டதென்றும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

எல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிசாரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப் பவர்களாவர். இவர்களின் நிலை ஆபத்தானதாக இல்லையென மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்தும் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related Labels:

No comments for: "அவசர இலக்கமான 119 உடன் தொடர்பினை ஏற்படுத்திய பின்னர் பொலிசார் தாக்கப்பட்டார்."


Leave a Reply

Powered by Blogger.

Blog Archive

More Latest