குத்தாட்டத்துக்கு 9 மாதமா?

ஒரு குத்தாட்டத்துக்கு 9 மாதமா? முன்பு எஸ்.ஜே சூர்யா என்ற ஹீரோ + இயக்குனர் இருந்தாரே தெரியுமா? ஓவராக ஆடி ஒடுங்கி போன இவர் தற்போது இசை என்ற படத்தை தானே நடித்து, இசையமைத்து இயக்கி வருகிறார். படத்தில் ஒரு குத்துப்பாடலை இணைக்க முடிவு செய்து அதற்கு இசையமைத்து சுமார் நான்கு மாதகாலங்கள் படப்பிடிப்பை நடத்தினார். பின்னர் அதை எடிட் செய்வதற்கு ஐந்து மாதங்கள் அவருக்கு தேவைப்பட்டுள்ளது. ஆகமொத்தம் இந்த குத்துப்பாடலுக்கு மட்டும் அவர் ஒன்பது மாதங்கள் எடுத்து கொண்டாராம்.


அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால், 'குத்துப்பாட்டின் சிறப்பு வாயால் சொன்னால் உங்களுக்கு புரியாது. படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்' என்று கூறி விட்டார். இந்த குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கும் நடிகை சாவித்திரி படுகவர்ச்சியான உடையில் ஆடி இருக்கிறாராம். ஓவர் பில்ட் அப் ஆகாது என்பதால் அமைதியாக இருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா.
Related Labels:

No comments for: "குத்தாட்டத்துக்கு 9 மாதமா?"


Leave a Reply

Powered by Blogger.

Blog Archive

More Latest